ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த முக்கிய அறிவிப்பின்படி, புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் தாளினை திரும்பப் பெறுவதாக கூறியிருந்தது. வரும் மே 23 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்த 2000 ரூபாய் தாள்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், மக்கள் பலர் பீதி அடைந்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் எங்களிடம்தான் கடந்த இரண்டு வருடங்களாக இரண்டாயிரம் ரூபாய் தாளே இல்லையே என்று சமூக வலைதளங்களில் கருத்தாடி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்கு இன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதாவது, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட வேண்டாம். குறிப்பாக பணத்தை மாற்றிக் கொள்வதற்கு எந்த படிவமும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை. மேலும் எவ்வித ஆணவமும் தேவையில்லை என்று கூறியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்று எஸ்பிஐ வங்கி தகவல் அளித்துள்ளது.