தமிழகத்தில், மதுவிற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் வகையில், மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை செங்குன்றத்தில், அதிமுக சார்பாக பொதுமக்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 2 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறினார். மதுவிற்கு அடியானவர்களை மீட்டெடுக்கும் வகையில், மறுவாழ்வு மையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post