திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சுமார் 2 ஆயிரம் காவலர்களை பணியில் நியமித்து, மதுரை மாநகர காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சுமார் 2000 காவலர்களை நியமிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவஆசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டும், வாகன ரோந்தின் மூலம் தீவிரகண்காணிப்பும் அமல்படுத்தப்படுகிறது. மேலும் திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம் காவல் நிலையங்களின் எல்லைப்பகுதிகளில் அதிகமான ரோந்து பணி மேற்கொள்ள 3 அதிவிரைவு படையினர் பணியில் உள்ளனர். அதேபோல் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post