சென்னையில் 50 சதவீத அரசு ஊழியர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கம்!!

சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 50 சதவீத அரசு ஊழியர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் அத்தியாவசிய பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அரசு முக்கிய துறைகளுக்கு ஏற்கனவே 175 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத பணியாளர்களைக் கொண்டு அரசு அலுவலகங்கள் இயங்க முதலமைச்சர் உத்தவிட்டுள்ளதாகவும், இதற்காக கூடுதலாக 25 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தலைமைச் செயல அலுவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், வரும் நாட்களில் பணியாளர்களுக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்க கோரும் பட்சத்தில், தேவையான பேருந்துகளை இயக்க தயார் நிலையில் இருப்பதாகவும் மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version