இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவருக்கும் தலைகவசம் கட்டாயம் செய்யப்பட்டதால் திண்டுக்கல்லில் தலைகவசம் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக காவல்துறை உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் எதிரொலியாக வாகன ஓட்டிகள் அனைவரும் தலைகவசம் வாங்குவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். திண்டுக்கல்லில் தலைகவசம் வியாபாரம் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சாதாரண தலைக்கவசம் முதல் அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைக்கவசம் வரை 300 வகையான தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Discussion about this post