தூத்துக்குடியில் அரசு பேருந்தில் நூதன முறையில் பணம் மற்றும் செல்போன் திருடிய 2 இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டிக்கு பேருந்தில் பயணித்த தாய், மகள், கயத்தாரில் இறங்கியுள்ளனர். அப்போது, பையில் இருந்த கைப்பை காணமால்போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து சென்ற போலீசார், பேருந்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2 பெண்கள் கைப்பையை திருடியது தெரியவந்தது. மேலும், அதே பேருந்தில் மாற்றொரு பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
Discussion about this post