சென்னை மண்ணடி பகுதியில் 2டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மண்ணடி மூர் சாலையில் உள்ள முகம்மது என்பவருக்கு சொந்தமான இடத்தில், சட்டத்திற்கு புறம்பாக செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துணை ஆணையர் தலைமையில் காவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
2 டன் செம்மரகட்டைகள் அங்கு இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அலாவுதீன், நையபுதீன் மற்றும் நவாப் ஆகிய மூவரும், செம்மர கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் நவாப் என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.