2.O திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள 2.O திரைப்படத்தின் டிரைலர் வரும் 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார்மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 2.O. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளநிலையில், வரும் 3-ம் தேதி டிரைலர் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நவம்பர் 29-ம் தேதி படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version