3 நாட்களில் 2 அடி உயர்ந்த பார்சன்ஸ்வேலி அனை நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீர் நிலைகள் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இதனால் மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மழை தொடரும் பட்சத்தில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மக்கள் தொகையை கணக்கில் கொண்டு மூன்றாவது குடிநீர் திட்டம் செயல்படுத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Exit mobile version