பேஸ்புக்கில் லைவ் செய்யப்பட்ட ரஜினியின் 2.0 திரைப்படம்

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தியேட்டரிலிருந்து சிலர் பேஸ்புக்கில் லைவாக வெளியிட்டுள்ளதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள 2.0 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை காட்சிகள் வெளியாகி ஒடிக்கொண்டிருந்த நிலையில், படம் பார்த்த சிலர் படத்தினை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளனர்.

படத்தின் அறிமுக காட்சியில் தொடங்கி 4 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனை பலரும் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். முதல் காட்சி மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இணையத்தில் திரைப்படம் லைவ் செய்யப்பட்டிருப்பதை கண்டு தயாரிப்பு தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Exit mobile version