சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சீனாவில் ஷான்ஜி மாகாணத்தில், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 66 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Discussion about this post