பேச்சுவார்த்தைக்கு பின்னரும், பணிக்கு திரும்பாத அரசு மருத்துவர்களுக்கு பதிலாக, புதிதாக 188 மருத்துவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, கடந்த சில நாட்களாக அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் சங்கத்தினர் உடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், 2,160 அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள், நோயாளிகளின் நலன் கருதி பணிக்கு திரும்பாவிட்டால் அந்த இடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், புதிதாக 188 மருத்துவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர்களுக்கான பணிநியமன ஆணையை இன்று வழங்க இருப்பதாக தெரிகிறது.
Discussion about this post