18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று இறுதிகட்ட விசாரணை

தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு, 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம், முதலமைச்சர் பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்றுடன் இறுதி கட்ட விசாரணை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து. ஒரு வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version