ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நீக்க கோரி 17 லட்சம் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், மூன்றாவது நாளாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டனர். சீனாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், சிறப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
போராட்டம் தீவிரமடைந்து வருவதால், ஹாங்காங்கில் பதற்றமான சூழல் நிலவுகிறது. விடுமுறை நாட்களில் மட்டுமின்றி வேலை நாட்களிலும் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.