பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 16 பேருக்கு தண்டனை அறிவிப்பு

பள்ளி மாணவிகள் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, 16 பேருக்கு தண்டனை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூரில், 2014 ஆம் ஆண்டு பள்ளி மாணவிகள் 2 பேர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த வழக்கில் 8 பெண்கள் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிரியார் அருள்தாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கலா மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 48 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version