158 ஆண்டு கால சட்டம், இனி இல்லை!

 ஓரினச் சேர்க்கையை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 377 தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது. அதாவது ஒரு ஆண், மற்றொரு ஆணுடனோ, ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ உடலுறவில் ஈடுபடுவதை இந்தச் சட்டம் குற்றமாக கருதுகிறது.  இந்தச் சட்டம் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. சுமார் 158 ஆண்டுகளாக இந்தியாவில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.  இதனை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் இல்லை என நீதிபதிகள் ஒரு மனதாக தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை வரவேற்று ஓரினச் சேர்க்கையாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் இப்போது தான் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஆரம்பம் மட்டுமே என தெரிவித்துள்ள நீதிபதி சந்திரசூட், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அடுத்தடுத்து உரிமைகள் பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

Exit mobile version