கர்நாடகா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

கர்நாடகாவில் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் இன்று பரிசீலிப்பதால் அம்மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் 3 மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். மேலும் அரசை ஆதரித்து வந்த 2 சுயேட்சைகளும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் கூட்டணி அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க முதலமைச்சர் குமாரசாமி தீவிரமாக முயற்சித்து வருகிறார். இந்நிலையில் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் இன்று பரிசீலிக்கிறார். ஒருவேளை ராஜினாமா ஏற்கப்பட்டால் கூட்டணியின் பலம் 103 ஆக குறைந்து விடுவதோடு, அரசு கவிழும் சூழல் ஏற்படும். இதனால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

Exit mobile version