மத்திய அரசின் கீழ் தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 42 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச் சாவடிகளுக்கு மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, சுங்க கட்டணம் உயர்த்துவது வழக்கம். அதன் அடிப்படையில், தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலையில் உள்ள, 14 சுங்கச் சாவடிகளின் கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரித்துள்ளனர். கட்டண உயர்வை குறைக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
14 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணங்கள் உயர்வு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: கட்டணங்கள் உயர்வுசுங்கச்சாவடி
Related Content
உள்ளூர் வாகனத்திற்கு கட்டணம் செலுத்த மறுப்பு - தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்
By
Web Team
May 25, 2021
தகராறில் சுங்கச்சாவடியை சேதப்படுத்திய பொதுமக்கள்
By
Web Team
January 27, 2020
தமிழகத்தில் ஏப்.1 முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
By
Web Team
March 29, 2019
அரசு போக்குவரத்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம்
By
Web Team
December 3, 2018