வரலாறு காணாத கோடை வெயிலின் தாக்கத்தால் பீகாரில் 130 பேர் பரிதாபமாக உயரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு கோடை வெயிலால் நாடு முழுவதும் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வருகிறது. அங்கு 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அந்த மாநிலத்தின் கயா, பாட்னா, பகல்பூரில் தற்போது வரை, 130 பேர் இறந்துள்ளனர். இன்று மேலும் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்பதற்காக, கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீகாரில் ஏற்கனவே மூளைக்காய்ச்சலுக்கு 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post