நீலகிரி மாவட்டத்தின் 150வது ஆண்டை ஒட்டி , 120 கிலோ எடைக் கொண்ட சாக்லெட்டுகளால் வடிவமைக்கப்பட்ட உருவ மாதிரிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
நீலகிரி மாவட்டத்தின் 150வது ஆண்டை கெளரவிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம், அரசுத்துறை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக உதகை அடுத்துள்ள H. P. F பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சாக்லெட் மியூசியத்தில் 120 கிலோ எடையுள்ள சாக்லேட்டுகளை கொண்டு நீலகிரி மாவட்டத்தின் பழங்குடி மக்களான தோடர், இருளர், படுகர், குரும்பர் இன மக்களின் பழமை வாய்ந்த வீடுகள், கோவில்கள் செய்யப்பட்டிருந்தன.
இந்த சாக்லெட் வடிவமைப்புகள் உள்ளுர் மக்களை மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
Discussion about this post