கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டு திட்டங்களை இணைக்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்கு சுகாதாரம் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.
அந்த வகையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 8 கோடி கழிப்பறைகள் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மருத்துவம் செய்ய பணம் இல்லை என்ற நிலை மாறி மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டு திட்டம் நம்மிடம் உள்ளது என்ற எண்ணம் மக்கள் மனதில் வர வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post