பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

சென்னையில் பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், 2020 – 2021ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 795 பேருக்கு, 415 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தாமக தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன், அதிமுக எம்.எல்.ஏ. சத்யா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Exit mobile version