கிராமப்புற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் 100 பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையடுத்து, தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் 100 பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.அந்த பல்பொருள் அங்காடிகளில் 300 வகையான பொருட்கள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post