சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்டிக் உபயோகம் குறித்த சோதனையில், இதுவரை10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 1 முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பொது மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொது மக்களும் படிப்படியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து வருகின்றனர். ஆயினும் இன்னும் சில வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்ததால், பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு அபராத தொகை வசூலிக்கும் முறை கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள 12 ஆயிரம் வியாபார நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனையில், இதுவரை 10 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது, 15 லட்சத்து 42 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.