குரங்கனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தேனி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஐ.டி.நிறுவன ஊழியர்கள் 40 பேர் 2 குழுக்களாக தேனி மாவட்டம் குரங்கனியிலிருந்து கொழுக்கு மலைக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி அனுமதியின்றி மலையேற்றம் சென்றனர். அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்தசம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் நினைவாக, மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி அவர் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக குரங்கணி மலையேற்றப் பாதையின் இரு புறமும் மரக்கன்றுகளை நட்டு துணை முதல்வர் தொடங்கி வைத்தார்.