கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் மீண்டும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான சயன், மனோஜ்சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஷ் சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகிய 10 பேரும் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இவர்களில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக மேலும் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இருவரும் தலைமறைவாகி பின்னர் கைது செய்யப்பட்ட நிலையில், மனோஜ்சாமி, திபு, பிஜூன்குட்டி, வாளையார் மனோஜ், சயான் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் குற்றவாளிகள் 10 பேரும் உதகை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வரும் மார்ச் 18-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி வடமலை உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post