நெகிழி மாசில்லாத் தமிழ்நாடு என்னும் பெயரில் 10 லட்சம் மாணவர்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி ஏற்கச் செய்தார்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்குத் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் இருந்தே தடை உள்ளது. இந்நிலையில் நெகிழி மாசில்லாத் தமிழ்நாடு படைப்பதற்காக 10 லட்சம் மாணவர்கள் ஒரே நேரத்தில் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னைத் தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் பள்ளி மாணவர்கள் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். அதன்பின் நெகிழி மாசில்லாத் தமிழ்நாடு படைப்பதற்கான உறுதிமொழியை முதலமைச்சர் முன்மொழிய மாணவர்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொண்டனர்.
உறுதிமொழியேற்ற பின் நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார். நெகிழியில்லாத் தமிழ்நாடு படைக்க ஒரே நேரத்தில் 10 லட்சம் குழந்தைகள் உறுதிமொழியேற்றது ஒரு கின்னஸ் சாதனை முயற்சியாகும்.