கேரள மாநிலம் மூணாறில், வாகனத்தில் இருந்து சாலையில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தையை, காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இடுக்கி மாவட்டம் கம்பிளிகண்டம் பகுதியை சேர்ந்த சதிஷ், சத்தியபாமா தம்பதியினருக்கு ஒரு வயதில் ரோஹிதா என்ற குழந்தை உள்ளது. கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் ஜீப் மூலமாக பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்து இரவு நேரத்தில், பழனியில் இருந்து மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, பெற்றோரின் கையில் இருந்த குழந்தை எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்தது. இதை அறியாமலேயே தம்பதிகளும் வீடு வரை சென்றுவிட்டனர். வீட்டிற்கு சென்ற பிறகே குழந்தை அவர்களுடன் இல்லை என்பதை உணர்ந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனிடையே குழுந்தை சாலையில் விழுந்த சமயத்திலேயே, அதனை மீட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர், மற்ற காவல் நிலையங்களுக்கு தெரிவித்திருந்தனர். இதையடுத்து காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.