உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் என்ற பெயரில், தாராபுரத்தில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய திமுகவினரின் கூட்டத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முக்கிய பகுதியான பழைய நகராட்சி முன்பு உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில் திமுகவினர் கூடினர். இந்த நிகழ்ச்சியால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்குச் செல்லும் மாணவ- மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
உடனடியாக போக்குவரத்தை சீராக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஒலி பெருக்கிகளை வைத்து வாகன ஓட்டிகளின் கவனத்தையும் திரும்பும் வகையில் திமுகவினர் செயல்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்திய திமுகவினரின் இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பலர் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
Discussion about this post