ஸ்ரீபெரும்புதூரில் ராணுவ தளவாட தொழில் பூங்கா

ராணுவ தளவாட தொழில் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு சார்பில் 250 ஏக்கர் நிலம் ஸ்ரீ பெரும்புதூரில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் பொருட்டு மிகப்பிரம்மாண்டமான ராணுவ தளவாட மையம் தமிழகத்தில் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் முதற்கட்டமாக தேசிய மற்றும் வெளிநாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தங்கள் நிறுவனங்களை அமைக்கும் பொருட்டு 250 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் ஒதுக்கப்பட உள்ளது. கடந்த முறை நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டிருந்தார் அதனைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வான்வெளி சார்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இந்த தொழில் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தும் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version