மத்திய நீர்வளத்துறை தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது என்று கூறி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஆலை ஏற்படுத்திய மாசுபாட்டால் மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில் மத்திய நீர்வள அமைச்சகம் தூத்துக்குடி நீர்மாசு ஆய்வு நடத்த ஆணையிட்டது தவறானது என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தடி நீர் தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமானதாக இல்லை என்றும் அறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பதாக தோற்றமளிக்கிறது என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி, மக்களிடத்தில் குழப்பம் விளைவிக்கும் எனவும் அவர் அதில் கூறியுள்ளார்.