முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்பல்லோ மருத்துவர்களிடமும் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு மருத்துவர்கள் சிலர் ஆஜராகாததால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இந்தநிலையில், அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி உள்ளார். இவர் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, வெளிநாட்டு சிகிச்சை தேவையில்லை என பேட்டி அளித்தவர்.
வெளிநாட்டு சிகிச்சை தேவையில்லை என்று சொன்னவரிடம் இன்று விசாரணை!
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அப்பல்லோ மருத்துவர்கள்ஆறுமுகசாமி ஆணையம்
Related Content
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 4 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு
By
Web Team
February 25, 2019
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை கால அவகாசத்தை நீட்டிக்க அரசுக்கு கடிதம்
By
Web Team
February 16, 2019
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
By
Web Team
December 28, 2018
ஜெயலலிதா மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு
By
Web Team
November 18, 2018
எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
By
Web Team
October 11, 2018