வெனிசுலாவின் யகுவாரேபரோ (YAGUARAPARO) பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7 புள்ளி 3 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் இருந்து 126 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் காரணமாக குமணா என்ற பகுதியில் வணிக வளாகம் ஒன்றின் மின் படிக்கட்டுகள் கீழே சரிந்து விழுந்தன. இதில் பலர் படுகாயமடைந்தனர். கராகஸ் நகரில் குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
Discussion about this post