கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதியில் இருந்து கல்லனை கீழனையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி வீராணம் ஏரிக்கு வினாடிக்கு ஆயிரத்து நானூற்று இருபது கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 46 புள்ளி 25 அடியாக உள்ளது. அதே சமயம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 74 கன அடி நீரும், வி.என்.எஸ் மதகு வழியாக சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 625 கன அடி உபரி நீரும் திறக்கபட்டு வருகிறது. இதனிடையே வீராணம் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது தாமதமாகி வந்தது. இந்த பணி தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை முதல் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வடவாறு,வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீராணம் ஏரியில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: தண்ணீர் திறப்புவிவசாயிகள் மகிழ்ச்சிவீராணம் ஏரி
Related Content
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!
By
Web Team
September 26, 2020
வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகளை விட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை
By
Web Team
September 21, 2019
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 1.02 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
By
Web Team
August 9, 2019
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை : விவசாயிகள் மகிழ்ச்சி
By
Web Team
June 8, 2019
ஓசூரில் குடைமிளகாய் ஏற்றுமதியால் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு
By
Web Team
June 8, 2019