ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் நடைபெறும் ஊழல்களைத் தடுக்கும் வகையில் டெல்லியில் வீடு தேடி சென்று பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, வரும் 10ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், ஆட்சி முறையில் ஒரு புரட்சியாகவும், ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர உள்ளதாக தெரிவித்துள்ளார். உலகிலேயே முதன்முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post