இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் இருந்து 9000 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று விட்டு அதை திருப்பி செலுத்தாமல், மல்லையா நாட்டை விட்டு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில், விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு மும்மூரமாக மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது மும்பை ஆர்த்தர் சாலையில் உள்ள சிறையில் விஜய் மல்லையா அடைக்கப்படுவார் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அங்கு போதிய வசதி இல்லை என விஜய் மல்லையா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறையில் மல்லையாவுக்கு வழங்கப்படவுள்ள வசதிகள் குறித்த 8 நிமிடங்கள் அடங்கிய வீடியோவை லண்டன் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
விஜய் மல்லையா குறித்த வீடியோ தாக்கல்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, உலகம், செய்திகள்
- Tags: மத்திய அரசுலண்டன் நீதிமன்றம்விஜய் மல்லையா
Related Content
மருத்துவப் படிப்பில் 69% இடஒதுக்கீடு: மத்திய அரசு நிலைப்பாடு என்ன?
By
Web Team
July 19, 2021
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அகவிலைப்படி 17 ல் இருந்து 28 % ஆக அதிகரிப்பு
By
Web Team
July 15, 2021
இன்று மாலை இந்தியாவுக்கு புதிய அமைச்சரவை? 3 அமைச்சர்கள் ராஜினாமா
By
Web Team
July 7, 2021
கொரோனா பவுடர் மருந்தின் விலை எவ்வளவு தெரியுமா?
By
Web Team
May 28, 2021
ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்கும் இந்தியா?
By
Web Team
May 17, 2021