விக்ரமின் “சாமி-2” வெளியானது

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நடிகர் விக்ரமின் “சாமி-2”ஆம் பாகம் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துக் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “சாமி” திரைப்படம், சூப்பர் ஹிட் திரைப்படமானது. திரிஷா, மனோரமா, கோட்டா சீனிவாசராவ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது.

தற்போது சுமார் 15 வருடங்கள் கழித்து “சாமி” படத்தின் இரண்டாம் பாகமானது இன்று தமிழகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தில், விக்ரமிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். இதனிடையே, மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே “சாமி-2” வெளியாகி உள்ளதால், ரஜினி, அஜித், விஜய் படங்களைப் போலவே, சில திரையரங்குகளில் அதிகாலை சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version