விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக அசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொழில்துறை அமைச்சர் சம்பத் பிரசாரம் மேற்கொண்டார்.
வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர்களை பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர். பிரசாரத்தில் அமைச்சருடன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரசைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சம்பத், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.