வாரணாசியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது – பிரதமர் மோடி சூளுரை!

பிரதமர் நரேந்தி மோடி தனது 68 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக பள்ளி மாணவர்களுடன்  கலந்துரையாடிய பிரதமர் மோடி, பின்னர் காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இந்த வழிபாட்டில் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வாரணாசியில் பாரதிய ஜனதா அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

வாரணாசியில் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரயில்வே மற்றும் வான் போக்குவரத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

  கங்கோத்ரி முதல் கங்கா சாகர் வரை தூய்மை பணிகள் நடைபெறுவதாகவும்,  இந்த திட்டத்தின் தற்போதைய மதிப்பு 21 ஆயிரம் கோடி என்றும் இதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

 

 

Exit mobile version