ஐரோப்பிய நாடான லிச்சென்ஸ்டீனின்(Liechtenstein) பாராளுமன்றத்தில் நிலநடுக்கத்துக்காக காப்பீடு வழங்குவது குறித்து விவாதத்தின் ஏற்பட்ட நிலநடுக்கம் எம்.பிக்களை அதிரச்செய்துள்ளது.
மேற்கு ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்துக்கும், ஆஸ்திரியாவுக்கும் இடையில் உள்ள சிறிய நாடான லிச்சென்ஸ்டீனில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்புக்கு காப்பீடு வழங்கும் திட்டம் குறித்து அந்நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் பீதியில் உறைந்தனர். இதைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.