லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் 4வது நாளாக நீடிப்பு

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றி, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் லாரி உரிமையாளர்கள் சங்கம் 4வது நாளாக   காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், வேன்கள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் நான்கரை லட்சம் கனரக வாகனங்களும், ஒன்றரை லட்சம் மினி வேன்களும் இயங்காது எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 4வது நாளாக தொடரும் வேலைநிறுத்தத்தால், சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. வேலைநிறுத்தம் தொடர்ந்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Exit mobile version