ரெட் அலர்ட் : காஞ்சிபுரம் மக்கள் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

கனமழை காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 10 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையைக் காட்டிலும் காஞ்சிபுரம் மாவட்டமே அதிக அளவில் பாதிக்கப்படும். இதனால், இந்தாண்டு வடகிழக்கு பருவமழையானது, வழக்கத்தைவிட அதி தீவிரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 10 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் பாலச்சந்திரன், முனியநாதன், வள்ளலார், சிவசண்முகராஜா, சுப்பையன், ஆனந்த், செந்தில்ராஜ், ஜான் லூயிஸ், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகிய 10 ஐஏஎஸ் அதிகாரிகள், மழை வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாலுகா வாரியாக வெளியிட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளின் செல்போன் எண்கள் இங்கே, உங்களுக்காக…

அமுதா                   – 9551555501
பாலச்சந்திரன்        – 9791223322
முனியநாதன்          – 9445205404
வள்ளலார்               – 7530002102
சிவசண்முகராஜா   – 9841276600
சுப்பையன்             – 9445041199
ஆனந்த்                  – 9940018185
செந்தில்ராஜ்           – 7397770020
அருண் தம்புராஜ்    – 9444001866
ஜான் லூயிஸ்          – 9047217555
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் – 7598073870

 

Exit mobile version