பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம், மற்றும் வெண்கல சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள படையாட்சியாரின் நினைவு மணிமண்பத்தின் அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் எடப்பாடி பனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.
மஞ்சை நகர் மைதானத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் சட்டத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.