நாடெங்கும் சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த சாலைகள் விரிவாக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்போடு இணைக்கும் வகையில் 650 கோடி ரூபாய் செலவில் புதிதாக மற்றொரு பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக மண்பரிசோதனை பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மண்ணில் கலந்துள்ள உப்பு, காரத்தன்மை குறித்து ஆய்வு செய்த பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.