ராணுவத்தில் ஆட்குறைப்பு – பணியில் உள்ள வீரர்கள் நீக்கப்படுவார்களா?

ராணுவத்தை நவீனபடுத்தும் விதமாக பழைய ஆயுதங்களுக்கு பதிலாக புதிய ஆயுதங்களை கொள்முதல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக ராணுவத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.

சுமார். 1.5 லட்சம் பேரை வேலையில் இருந்து நீக்கும் வகையில் அரசுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்திற்கும் ஒதுக்கும் தொகை 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இதில் ஓய்வூதியம் அடக்காது. தற்போது ராணுவத்தின் மூலதனத்திற்கான செலவு என்பது 26 ஆயிரம் கோடியாக உள்ளது. இது மொத்த தொகையில் வெறும் 17 சதவீதம் தான்.

அதிக அளவு சம்பளத்திற்கே போய் விடுவதால், போதிய அளவில் நவீன ஆயுதங்கள் வாங்க முடிவதில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆட்குறைப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதாக ராணுவ உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதே நேரம் தற்போது பணியில் இருக்கும் வீரர்களை நீக்கும் திட்டம் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுகின்றனர். அதற்கு பதிலாக இளம் வீரர்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகளை நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version