ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2014 ஆம் ஆண்டு ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரத்தில் 2014 -ம் ஆண்டிற்குப் பிறகு பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாகவும், தமிழக அமைச்சரவைக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக அமைச்சரவையின் பரிந்துரை நகலையும்,பிற ஆவணங்களையும் மூன்று வாரத்திற்குள் சமர்பிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.