ரஷியாவுடன் 36 ஆயிரம் கோடி ரூபாயில் இந்தியா புதிய ராணுவ ஒப்பந்தம் செய்ய உள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறைப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிகளில் இந்திய -ரஷ்ய 19வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின்போது, இந்தியா 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வாங்க, ரஷியாவுடன் புதிய ஒப்பந்தம் செய்கிறது.
இது குறித்து, ரஷ்ய அதிபர் புடினின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி உசாகோவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, விளாடிமிர் புடின் இந்திய பயணத்தின்போது, இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மதிப்பு, 36 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் அவர் தெரிவித்தார்.