ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் இருந்து 80க்கும் மேற்பட்ட சிலைகள் இன்று கைப்பற்றப்பட்ட நிலையில், கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிலை கடத்தில் வழக்கில் முக்கிய புள்ளியான தீனதயாளன் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான ரன்வீர் ஷாவின் சென்னை வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது 80க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, மேல்மருவத்தூர் அருகே மொகல்வாடியில் உள்ள ரன்வீர் ஷாவின் பண்ணை வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 80க்கும் மேற்பட்ட பழங்கால கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல், பெரிய தொழிலதிபர்களிடம் கடத்தல் சிலைகள் இருப்பதாக தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்குள் அந்த சிலைகளை அவர்கள் கொண்டு வந்து ஒப்படைத்தால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அவர் கூறினார்.