தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
“தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை” முன்னிட்டு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரத்த தானம் மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயல் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், குருதி பரிமாற்றுக் குழுமமும் இணைந்து ரத்த தான முகாம்களையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓராண்டில் 4 முறை ரத்த தானம் செய்த ஆண்கள், 3 முறை ரத்த தானம் செய்த பெண்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 99 விழுக்காடு ரத்தம், தன்னார்வக் கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் அதை 100 சதவீதமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post