ரஜினி பாஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ,கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் பேட்ட. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்றது. தற்போது லக்னோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினி படம் என்பதால் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் இடைவெளியில் முக்கியஸ்தர்கள் ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்து செல்கின்றனர். உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

Exit mobile version